Local

மஹிந்த அணியினரின் மிளகாய்த்தூள் தாக்குதல்: பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு!

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மஹிந்த அணியினரால் நடத்தப்பட்ட மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

“இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். மிளகாய்த் தூள் எனது முகத்திலும் வீசப்பட்டது. எனது கண்களை மூடுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் என்பதை தெரிவிக்கக் கூட என்னால் முடியவில்லை. இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். நாடாளுமன்றம் மதிப்புக்குரிய இடம். அதன் காரணமாகவே நான் முறைப்பாட்டைப் பதிவு செய்கின்றேன். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்” என்று காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading