Local

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை!

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறையைவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் என தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு காணப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading