Local

போலியான பிரதமருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மைத்திரி!

இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்த பின்னரே இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது என மஹிந்த தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், நேற்றைய சர்வகட்சிக் கூட்டம் முடிவுகள் ஏதுமின்றி முடிந்தது என மஹிந்த தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போலியான பிரதமர் மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைத்திரி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளமை வெட்கக்கேடான செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் சாடியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading