Local

ரணிலைக் கணக்கில் எடுக்காத மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடத்திய சர்வகட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இயல்பான முறையில் பேசினார்.

அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எனினும், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் பேசவில்லை.

ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கருத்துக்களுக்கும் பதிலளிக்காமல் தவிர்த்துக் கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்றைய சர்வகட்சிக் கூட்டத்தில் சஜித் பிரேமதாஷவே ஐ.தே.க. தரப்பில் கலந்துள்வதாக இருந்தது.

எனினும், இறுதி நேரத்திலேயே ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில், சஜித் பிரேமதாஷவும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading