Local

மைத்திரி, ரணிலுடன் சர்வதேச இராஜதந்திரிகள் முக்கிய பேச்சு!

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழு, அலரி மாளிகைக்குச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக – தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading