Local

போலி ஆவணங்களுடன் கொழும்புக்குள் பிரவேசிப்பவர்களுக்கு 5 வருட சிறை!

போலி ஆவணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு கொழும்பு நகரம் உள்ளிட்ட நகரங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு இணங்க மேற்படி தண்டனை வழங்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீதி செயற்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு பெருமளவிலானோர் கொழும்பு நகருக்குள் கடந்த 31ஆம் திகதி பிரவேசித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading