Local

மக்களை சந்தோஷமாக வாழ வைக்கவே இக்கட்டான நிலையில் பதவி ஏற்றதாக ரணில் தெரிவிப்பு!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவேன்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க நீங்கள் நாட்டு மக்கள் பட்டினியால் மரணிக்க விரும்புகிறீர்களா? அல்லது பொய்யான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறீர்களா என்று வினவினார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை தெரிவு செய்தது நீங்கள் தான் நான் அல்ல எனவும் கூறினார்.நான் பதவி ஏற்றது மக்கள் மூன்று வேளையும் உணவு உண்டு சந்தோஷமாக வாழ வைக்கவே இக்கட்டான நிலையில் பிரதமர் பதவியை ஏற்றதாகவும் கூறினார்.

” கோட்டகோகம போராட்டம் தொடரலாம்.
போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் கைவைக்கமாட்டார்கள்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading