Local

மக்கள் மத்தியில் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைவாகவுள்ளது!

பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் மத்தியில் குறைந்த ஆர்வமே இருப்பதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

டிசம்பர் விடுமுறை நாட்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், பூஸ்டர் டோஸைப் பெறுவது மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் பொது சுகாதார பரிசோதகர், சுகாதார மருத்துவ அதிகாரியை தொடர்புக் கொள்வதன் மூலமோ அல்லது தடுப்பூசி மையங்களின் ஊடாகவோ பூஸ்டர் டோஸை பெறுவதை உறுதிப்படுத்துமாறு அவர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading