Local

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு விநியோகிக்க கட்டுப்படுத்தப்படும்!

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய்
விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.மேலும், அண்மைக்காலமாக மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது. இந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது.

மண்ணெண்ணெய் விற்பனையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 23 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.

நவம்பர் மாதம் 3ஆம் திகதி மின்சார சபை ஆர்ப்பாட்டம் காரணமாக மின்சாரம் தடைப்படும் என கட்டுக்கதை ஒன்று பரவியது. இதனால் அதிகளவில் மண்ணெண்ணெயை மக்கள் கொள்வனவு செய்தமையாலேயே பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இல்லை.

இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பது கட்டுப்படுத்தப்படும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading