Up Country

மனிதர்கள் 100 வருடங்கள் வரை வாழ முடியுமா? ஆய்வில் தகவல்!!

மனிதர்கள் நூறு ஆண்டுகளையும் தாண்டி வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம்

மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள் முதிர்வடைவதை தாமதப்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் சமீப காலமாக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், விஞ்ஞானிகளின் ஆய்வில் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் போஹெட் திமிங்கலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் ரோச்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், திமிலங்த்தில் ஒரு அரிய புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். சிஐஆர்பிபி என்று அழைக்கப்படும் இந்த மேஜிக் புரதம்தான், டிஎன்.ஏ சிதைவை தள்ளிவைக்கிறதாம். இதனால் திமிங்கலங்கள் 200 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

இந்த புரததத்தை ஆய்வகத்தில் எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில், மனித செல்களையும் இந்த புரதம் சீர் செய்வது கண்டறியப்பட்டுள்ளதாம். குறைந்த வெப்ப நிலையில்தான், சிஐஆர்பிபி புரோட்டீன் அதிகரிப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதுகிட்டதட்ட ஏற்புடையதாகவே உள்ளது. ஏனென்றால், போஹெட் திமிங்கிலங்கள் உறைபனி மிகுந்த ஆர்க்டிக் கடற்பரப்பில் வாழ்கின்றன, அங்குள்ள குளிரான சூழ்நிலை இயற்கையாகவே CIRB புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மனிதர்களில் சிஐஆர்பிபி புரோதத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு வழிகளை தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதாவது, குளிர்ந்த நீரில் குளியல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் இவற்றில் அடங்கும். எனினும், இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading