World

மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தற்கொலை!

லண்டனில் (06/10/2020) அதிகாலை 12.50 மணியளவில் தனது மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேற்கு லண்டன் Brentford உள்ள Clayponds Lane இல் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் ஐவர் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தில் லண்டனில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இரவு காவல்துறையினர் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவவண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது. இவர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.

காவல்துறையினர் கொல்லப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி கணவர் குகராஜ் சிதம்பரநாதன் (42), தனது மனைவி பூர்ணா காமேஸ்வரி சிவராஜ் (36) மற்றும் மூன்றே வயதான மகன் கைலாஷ் குகராஜ் ஆகியோரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இவர்கள் வாழ்ந்த பகுதியும் இவர்களின் மாடித்தொகுதியும் ஒரு வளம்மிக்க பகுதி எனவும் இவர்கள் அயலவர்களுடனும் மிக நல்ல உறவைப் பேணி வந்துள்ளனர் எனவும் எப்போதும் குடும்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தம்பதிகள் மலேசியத் தமிழ் குடும்பத்தினர் எனவும் தெரிய வருகின்றது.

மேலும், பொது முடக்கத்தின் போதும் அதன் பின்பும் தம்பதியினர் மத்தியில் வாய்தர்க்கம் மற்றும் அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்,

அதிகாலை நான்கு மணியளவில் அவர்களுடைய உடலங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading