World

மனைவியின் வெட்டப்பட்ட தலையுடன் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த நபர்!

கம்போடியாவில் மனைவியின் வெட்டப்பட்ட தலையுடன் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

கம்போடியாவின் புனோம் பென் பகுதியை சேர்ந்த 27 வயது புவோங் ராதா என்பவரே மனைவியை கொலை செய்த வழக்கில் சிக்கியவர்.

தமது மனைவிக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கருதிய அவர், கோபத்தில் 23 வயதான Ly Srey Nouch என்பவரை கொலை செய்து, ஆத்திரத்தில் அவரது தலையை துண்டித்துள்ளார்.

பின்னர் லையின் தலையை ஒரு வெள்ளை சாக்கில் திணித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று அருகில் உள்ள தரிசு நிலத்தில் வீசியுள்ளார்.

இந்த நிலையில் அண்டைவீட்டு நபர் பயத்தில் இவர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பொலிசார் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில், அடுத்த நாள் பொலிசாரிடன் புவோங் ராதா சிக்கியுள்ளார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மனைவியின் தலையை வெட்டியதன் காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் ஒருமுறை கூட மனைவியை காயப்படுத்தவோ தாக்கவோ இல்லை என குறிப்பிட்டுள்ள புவோங் ராதா, தம்மை அவர் ஏமாற்றுவதை தாங்க முடியாமல் கழுத்தை துண்டித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால் புவோங் உண்மையில் தமது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளதாகவும், கோபத்துடன் கத்திப்பேசுவதை பலமுறை கேட்டுள்ளதாகவும் அக்கம்பக்கத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

பொலிசார் தெரிவிக்கையில், லை மீதான இந்த தாக்குதல் கோபம் மற்றும் பொறாமையால் நடந்துள்ளது எனவும், தொடர்புடைய நபர் கைதாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் புவோங் ராதா தமது மனைவியை வன்முறை மற்றும் கொடூரமான முறையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் எனவும், நீதிமன்றத்தில் முறைப்படி குற்றச்சாட்டை எதிர்கொள்வார் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading