மன்னர் சார்லசுக்கு குறைந்துவரும் ஆதரவு…!!!
King Charles paying the price for Prince Harry’s return as popularity hits record low: மன்னர் சார்லசின் புகழ் குறைந்துவரும் நிலையில், அதற்குக் காரணம் இளவரசர் ஹரி என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு மக்கள் ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
YouGov அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், மன்னர் சார்லசுக்கு 58 சதவிகித மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், கோடையில் நடத்தப்பட்ட ஆய்வின்போது மன்னருக்கு இருந்த ஆதரவு, தற்போது 4 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், மன்னருக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளதற்கு, இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியா திரும்பியதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மக்களை ஏமாற்றமுடியாது என்கிறார் ராஜ குடும்பச் செய்தியாளரான டாம் ஸ்கைஸ் என்பவர்.
ஹரி பிரித்தானியா திரும்பியதன் பின்னணியில் மன்னர் சார்லஸ்தான் இருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கூறும் ஸ்கைஸ், ஹரி வீடு திரும்பவேண்டும் என மன்னர் விரும்பினார் என்பதும், ஹரி பிரித்தானியா திரும்புவதைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும் என்கிறார்.

ஆக, மக்களிடையே மன்னர் சார்லசின் புகழ் குறைந்துவருவதற்குக் காரணம், இளவரசர் ஹரிதான் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

You must be logged in to post a comment.