World

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளை, போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும் திறன் தங்களுக்கு இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானுக்குள் தரைவழியாக நுழைய முயற்சிக்கும் எதிரிப் படைகள், தங்களுக்கு மரணப் பொறியாக மாறும் களத்தைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பேச்சுவார்த்தை | Iran Us Tension Talks Open Strait Of Hormuz

எனினும், சமாதான ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்ற அவசரம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, கட்டார் மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், அமெரிக்கா ஒத்துழைத்தால் இரண்டு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance அனுப்பிய கடிதத்தின் தொனி முற்றிலும் மாறியுள்ளதாக ஈரான் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். இதனை நேர்மறையான அறிகுறியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading