Local

மன்னார் – இந்தியாவிற்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது.

மன்னார் மற்றும் இந்தியாவிற்கு  இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading