Uncategorized

மன அழுத்தம் காரணமாக குழந்தையின்மை பிறப்பு விகிதம் குறைவு ஆய்வில் தகவல்!

வேலை மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகின்றது.

இந்த மன அழுத்தம் பல்வேறு நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

Infertility:

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்பட்டால் பெண்களுக்கு குழந்தை பிறக்கின்ற வாய்ப்புகள் குறையும். ஆனால், ஆண்களுக்கு லேசான மன அழுத்தம் இருந்தால் கூட அவர்களுக்கு குழந்தை பிறக்கின்ற வாய்ப்புகள் மிக மிக குறைவதாக தெரியவந்துள்ளது.

Subfertility

மனச்சோர்வு இல்லாத ஆண்களுடன் மனச்சோர்வு கொண்ட ஆண்களை ஒப்பிடும்போது குழந்தை பேரு 33 சதவீதம் குறைவாகவும், பெண்களில் 15 சதவீதம் குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. படித்த ஆண் மற்றும் பெண்களிடையே அதிகப்படியான மன அழுத்தம் இருக்கிறது.

Infertility

இதுதான் குழந்தை பேரு இல்லாமல் போக முக்கிய காரணமாக உள்ளது. ஆரம்பத்திலேயே மருத்துவர்களிடம் சென்று உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது, இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நல்ல வழி.

முடிந்த அளவிற்கு ஆண்களும் பெண்களும் தங்களை தாமாகவே மகிழ்ச்சி அடைய வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், குழந்தை உருவாவதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading