மரக்கிளையில் மோதிய நபரின் கண்ணில் முளைத்த செடி..!!
russia man finds plant growing in eye after month of headache: மரக்கிளையில் மோதிய நபரின் கண்ணில் சிக்கியிருந்த விதை, 3 மிமீ அளவிற்கு வேர் விட்டு வளர்ந்துள்ளது.
ரஷ்யாவின் சைபீரியவை சேர்ந்த 42 வயதான மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் (Maxim Sleptsov), கடந்த 4 மாதங்களாக கடுமையான தலைவலி, இரட்டைப் பார்வை மற்றும் கடுமையான அழற்சி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார்.

யாகுட்ஸ்கில் உள்ள அவசரகால கண் பரிசோதனை மையத்திற்கு சென்று பரிசோதித்த போது, அவரது கண்ணில் செடி ஒன்று வளர்ந்து வருவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கண்ணின் உள்ளே இருந்த விதை, கண்ணுடைய வெள்ளைப்பகுதியில் 3 மிமீ அளவிற்கு வேர் விட்டு வளர்ந்துள்ளது.

அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த விதையை அகற்றிய நிலையில், மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் தற்போது நலமுடன் உள்ளார்.
மாக்சிம் ஸ்லெப்ட்சோவ், மீன்பிடிக்கவும் பெர்ரி பழங்களைப் பறிக்கவும் ஒரு நண்பரைச் சந்திக்க அபிய்ஸ்கி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மரக்கிளை அவரது முகத்தில் மோதியுள்ளது.
கண்ணில் அடிபட்டது போல அரிப்பும், வலியும் இருந்தது. கண்ணில் நீர் வடிந்து சிவந்து காணப்பட்டது. கண்ணைக் கழுவி, ஒரு சிறிய மரப்பட்டைத் துண்டை அகற்றிய பிறகு அந்த பிரச்சினை முடிந்து விட்டதாக மாக்சிம் கருதினார்.
ஆனால், அவர் கண்ணில் சிக்கியிருந்த விதை 4 மாதங்களாக அவரை கடுமையாக பாதித்துள்ளது.

You must be logged in to post a comment.