Local

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தேர்தலில் வெற்றி!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதி, விருப்புவாக்கு பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு கடந்த 31 ஆம் திகதி  மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தலுக்கு 5 நாட்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே கடந்த 31 ஆம் திகதி வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் சார்பில் அவரின் மகள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வெளியாகியுள்ள விருப்பு வாக்கு பட்டியலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 237 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading