மறைந்த ஈரானியத் தலைவரின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்..!!
ஈரானிய அதியுயர் தலைவர் அலீ காமேனியின் இறுதி ஊர்வலம்: ஜூலை 3 முதல் ஏழு நாட்கள் நடைபெற ஏற்பாடு
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வலங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஜூலை 3 முதல் ஏழு நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.
இதில் மில்லியன் கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு வழிபாடுகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் ஈரானின் தெஹ்ரான் மற்றும் நஜாஃப், இராக் (Iraq) ஆகிய புனித நகரங்கள் வரை நடத்தப்படவுள்ளன.
அனைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளும் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி மஷாத் (Mashhad) நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இமாம் ரெஸா (Imam Reza) திருத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Image Credit : Al Jazeera







You must be logged in to post a comment.