Local

மஹிந்தவின் மனைவி செய்த மோசடியை அம்பலப்படுத்தினார் சந்திரிகா!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மோசடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்க வெளிபடுத்தியுள்ளார். 

ஆட்சியில் இருந்தவர்கள் திருடியமையே நாடு இன்று வங்குரோத்து அடைய காரணமாகும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார். 

எதிர்காலத்திற்கான மாற்றம் என்ற தொனிப்பொருளில் குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று எமது நாட்டில் சுமார் 33 வீதமானவர்களுக்கு தொழில் இல்லை. பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்துள்ளது. முதற் தடவையாக இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக சர்வதேசத்திற்கு அறிவித்தது. 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் வரை ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் மோசடியில் ஈடுபட்டனர். அன்று நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயல்திட்டத்தை நானே ஆரம்பித்தேன்.

ராஜபக்ஷ அதில் 15 பில்லியனை ரூபாய் வரையில் கையாடல் செய்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற திருட்டு ராஜபக்ஷவின் மனைவி செய்த மிகப்பெரிய மோசடியாகும்.

இவ்வாறான திருட்டுக்கள் காரணமாக இன்று எந்த நாடும் வங்குரோத்து அடையாத  அளவிற்கு இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளது. இந்த நிலையில் நாட்டை கட்டியெழுப்ப புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் மாற்றமொன்று தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading