Local

மஹிந்தவுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியபோது மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி மகிழ்ச்சி – கோட்டா கடும் சீற்றம்

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் நேற்று ‘எலிய’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மகிந்த ராஜபக்சவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.

ஆனால் பிரச்சினை என்னவெனில், நாடு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு  காத்திருக்க முடியுமா? என்பதேயாகும்.

ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான்.

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி வரவேற்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading