Local

மஹிந்த ஆட்சியால் அச்சத்தில் மக்கள்! – மங்கள சமரவீர சுட்டிக்காட்டு

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் சர்ச்சை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மஹிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள்.

நாட்டின் பிரதமராக மஹிந்த கடமைகளைப் பொறுப்பேற்றால் அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வாழவேண்டி ஏற்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading