Local

மஹிந்த செய்தது மாபெரும் தவறு! – குமார வெல்கம தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்‌ஷ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இடைக்கால அரசின் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார்.

சற்றுப் பொறுத்திருந்தால் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தை அவருக்கே மீண்டும் கையளித்திருப்பார்கள்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாகச் செயற்பட்டவர்கள் இன்று தம்மைத் தாமே ஆளும் தரப்பினர் என்று குறிப்பிட்டுக்கொள்ள எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading