Local

மஹிந்த ராஜபக்ச தாக்கப்படலாம் புலனாய்வுப் பிரிவு தகவல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி பயணிக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ மீது எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதனால் உச்சபட்ச பாதுகாப்பை வழங்கவது உகந்தது என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading