Local

மாகந்துர மதுஷின் சகா மட்டக்குளியில் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரரான அந்தரே வத்தே சாமர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை மட்டக்குளிய பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த கைக்குண்டு ஒன்றும் 5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவுடன் இணைந்து சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவர் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளராகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகநபர் பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கோருகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டுள்ள அந்தரே வத்தே சாமர தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading