Local

மாகந்துரே மதுஷ் இலங்கை வந்தால் என்ன நடக்கும்? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்!

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர்  மாகந்துரே மதுஷ், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால் இங்குள்ள அரசியல்வாதிகளே அவரை தப்பிக்கவைத்துவிடுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

மாவனெல்லையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு  குற்றஞ்சாட்டினார்.

“மாகந்துர மதுஷ் உடன் கொடுக்கல்- வாங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ளனர்.

மாகந்துர  மதுஷின் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பினோம். இருப்பினும் எந்ததொரு பதிலும் வழங்கப்படவில்லை.

மதுசுக்கும் இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது. மதுஷின் தந்தையின் மரண ஊர்வலத்தில்கூட அரசியல்வாதியொருவர் பங்கேற்றிருந்தார்.

எனவே, தகவல்கள் வெளியானால் சில அரசியல் வாதிகளின் முகத்திரை கிழிந்துவிடும். இதனால்தான் தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

மாகந்துரே மதுஷ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால், அவருக்குகு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகமே.  அரசியல்வாதிகள் சிலர் அவரை சட்டத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு கூட  உதவியளிக்ககூடும்.” என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading