World

மாணவிகள் உடலுறவுக்கு ஒத்துழைத்தால் அதிக மதிப்பெண் ஆசிரியரின் கருத்தால் பரபரப்பு!

தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளிடம் ”தன்னுடன் உடலுறவுக்கு ஒத்துழைத்தால் அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக ”கல்லூரி ஆசிரியர் ஒருவர் தெரிவித்த சம்பவம் மொராக்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராக்கோவின் யஜ்டா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரே இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆசிரியர் மாணவிகளிடம் ” நீங்கள் பரீட்சையில் நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டுமென்றால் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள்  பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே இவ்விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து குறித்த ஆசிரியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மொராக்கோ சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டு வந்த போதும் அது தொடர்பாக பெரிய அளவில் விசாரணை நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் இணையத்தில் வெளியானதையடுத்து  அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading