மாமாவின் 170 வது படத்தை இயக்கும் மருமகன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருந்தவர்களை கெளரவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன்
‘பைரவி’யில் ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சிறந்த நண்பர் விட்டல் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோரைக் கெளரவிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
ரஜினி தன்னுடைய 170 வது படத்திற்கு எஸ்.பி.முத்துராமன் திரைக்கதை எழுத வேண்டும் என்று ரஜினி விரும்பியுள்ளார். ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால் அதை எஸ்.பி.முத்துராமன் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பதில், படத்தில் சிறப்புத் தோற்றத்தில் (Guest appearance) வந்து போவதாகக் கூறியுள்ளார் முத்துராமன். இந்தப் படத்தில் ரஜினியின் மருமகன் தனுஷும் ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் 168 வது படமான அண்ணாத்த தீபாவளியின் போது வெளியாகிறது. 169 வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவர் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 170வது படத்தை அவரது மருமகன் தனுஷ் இயக்கத்தில் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. விரைவில் இந்தப் படங்களின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாக உள்ளன
