Local

மார்ச் 6 முதல் பட்ஜட்மீது விவாதம்! பெப்ரவரியில் ஒதுக்கீட்டு சட்டமூலம்!!

புதிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக, எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுதிட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் 2018 ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற அமர்வு முடிவுக்கு  கொண்டுவரப்பட்டதால் அந்ததிருத்த சட்டத்திற்கான  அனுமதியை பெறமுடியாமல்போனது.

மார்ச் 5 இல் பட்ஜட் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், 6 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading