Local

மினுவங்கொட துப்பாக்கிச் சூடு மூவர் பலி மூவர் கைது!

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணியளவில் இந்த துப்பாக்கி சூடுசம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை மற்றும் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading