Sports

மீண்டும் அணித் தலைவரானார் டோனி

ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் தலைவராக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டில் ஜடேஜா தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading