Cinema

மீண்டும் ரஜனி – சங்கர் கூட்டணியில் தயாராகும் 3.0 திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோரின் கூட்டணியில் மீண்டும் பிரம்மாண்டத் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.

குறித்த இருவரின் கூட்டணியில் உருவாகியிருந்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.

இந்நிலையில், ‘2.0’ திரைப்படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் ‘3.0’ திரைப்படம் உருவாவதற்கான சமிக்ஞை காட்டப்பட்டது. இவ்வாறிருக்க, சங்கர் மற்றும் ரஜினிகாந்த் இணையும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

‘தலைவர்-171’ திரைப்படமே ரஜினியின் கடைசித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 172ஆவது திரைப்படமாகவே இயக்குநர் சங்கருடனான கூட்டணி அமையும் என தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading