முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாட் பதியுதீன் இன்று மாலை சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
21/4 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே, குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் வைத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்
