முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 20ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டது.
பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து – அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மிரியான பொலிஸாரால் ரஞ்சன் ராமநாயக்க நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
