Local

முழுமையாக அரசியலில் இருந்து விலக ராஜபக்ச குடும்பம் திட்டம்?

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் எவரும் போட்டியிட மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட ராஜபக்ஷர்கள் துணிவார்களா எனக் கூற முடியாது. 

அந்தளவுக்கு ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அந்த கட்சியின் நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர், ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெறபோவதில்லை எனவும், கீழ் மட்டத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே தற்போது செய்ய வேண்டிய சிறந்த பணி எனவும் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தில் அநீதிக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதள்போதே மக்களுக்கு ராஜபக்ஸவினர் மீதுள்ள கோபம் தணியலாம் எனவும் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading