Local

முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய 3 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அவர்களில் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

உடன் அமுலக்கு வரும் வகையில் அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading