Local

நீதிமன்ற உத்தரவால் மஹிந்த அதிருப்தி – தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றை நாட முடிவு!

பிரதமர் மஹிந்தவுக்கும்,  அவரது அமைச்சர்களும், செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக்கொள்ளமுடியாது என மஹிந்த ராஜபக்ச இன்று மாலை அறிவித்துள்ளார்.

பிரதமராக மகிந்த ராஜபக்சவும்,  புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும்,  செயற்படுவதற்குதடை விதிக்கக் கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த  மனுமீதான விசாரணையின்போதே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து மஹிந்தவால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

” மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு இணங்கமுடியாது.குறித்த தடை உத்தரவிற்கு எதிராக நாளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். அரசமைப்பு தொடர்பில் பொருட்கோடலை உயர்நீதிமன்றத்தாலேயே வழங்க முடியும் என நாம் நம்புகின்றோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு அதிருப்தியளிப்பதாக உதயகம்மன்பில எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading