Local

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்காமல் நாம் செயற்பட வேண்டும்! – பதவி இழந்த மஹிந்த அதிரடிக் கருத்து

“தற்போதைய அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடைத் தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவுத் தீர்ப்பை ஆட்சேபித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீடு செய்கின்றோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யாரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை. எனினும், நேற்றைய நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும். எங்கள் பயணம் தொடரும். ஆட்சி அல்ல தேர்தல் ஒன்றே எங்களின் உடனடித் தேவை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading