World

மைக்ரோசாப்ட் மீண்டும் அதிரடி ; ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

நேற்று  ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக  அறிவிக்கவில்லை.

மைக்ரோசாப்ட் மீண்டும் அதிரடி ; ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம் | Microsoft In Action Again Thousands Face Layoffs

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் எனறு தெரியவருகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading