Lead NewsLocal

மைத்திரிக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை! – ஜனநாயக நடைமுறைகளை மதித்து நடக்கவேண்டும் எனவும் வலியுறுத்து

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 2019 ஜனவரி 05ஆம் திகதி தேர்தலை நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஜனநாயக நடைமுறைகளை இலங்கை மதிக்க வேண்டும் எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்புகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐ.நா செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றார்.

அத்துடன், கருத்து வேறுபாடுகளுக்கு சட்டத்தின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றியும் தீர்வைக் காணவேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை அரசு அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் உறுதி செய்யவேண்டும் என்றும், மனித உரிமைகள், நீதி மற்றும் நல்லிணக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்துகின்றார்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading