Local

மைத்திரி – மஹிந்த அரசுக்கு எதிராக எழுதவே வேண்டாம்! – பத்திரிகைகளை மிரட்டுகின்றார் வாசு

இலங்கையில் வெளிவரும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகள் மைத்திரி – மஹிந்த அரசின் பயணத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன என ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த பத்திரிகைகளின் தலையங்கங்கள் புதிய அரசாங்கத்துக்குஎதிரான வாதங்களைக் கொண்டிருக்கின்றன எனவும், எனவே மைத்திரி – மஹிந்த அரசுக்கு எதிராக எழுத வேண்டாமென சகல ஊடகங்களிடமும் தாம் கோரிக்கை விடுக்கின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading