Local

மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் பதவி நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த அமரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதர் சில்வாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆதர் சில்வாவுக்கு பதிலாக நாலக்க நிஸாந்த விஜேரத்ன நியமிக்கப்படவுள்ளதாகவும் பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த அமரசிறி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading