World

யாரோ என நினைத்து மகளை சுட்டுக் கொன்ற தந்தை!

நபர் ஒருவர் ‘தனது வீட்டுக்குள் யாரோ அந்நியர் நுழைந்து விட்டதாக எண்ணி தனது சொந்த  மகளையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒஹியோ மாகாணத்தின் கொலம்பஸ் புறநகர்ப் பகுதியில், ஜேன் ஹேர்ஸ்டன் என்ற 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு அவரது தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 இதையடுத்து, தங்கள் மகள் வீட்டின் கார் ஷெட்டில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது தாயார் அவசரகாலச் சேவைப் பிரிவுக்கு அழைக்கவே அங்கு விரைந்து வந்த அவசர கால பிரிவினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை, குறிப்பாக இக் கொரோனா காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading