Local

அனுராதபுரம் சிறை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர் யாழ். பல்கலை மாணவர்கள்!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றிலிருந்து மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் தலைமையில் இந்த நடைபவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியது.

பெருமளவு மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைபவனி கிளிநொச்சி,வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலை வரை சென்று, அங்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனியில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்துகொண்டனர்.

இந்த நடைபவனியில் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading