World

யுரேனியத்தை கடத்தி அமெரிக்காவை முட்டாளாக்கிய ஈரான்

ஈரானின் அணுஉலைகளில் இருந்த யுரெனியம் அமெரிக்காவிற்கு தெரியாமல் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தோடு, ஈரான் யுரெனியத்தை கனரக வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு மாற்றுவதான செய்மதி புகைப்படங்களும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

யுரேனியத்தை கடத்தி அமெரிக்காவை முட்டாளாக்கிய ஈரான்: ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை! | Iran Working To Restore Its Nuclear Industry

இந்த நிலையில், ஈரானின் அணுத்துறையை மீட்டெடுக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாக அந்நாட்டின் அணுஆணையத் தலைவர் மொஹம்மட் எஸ்லாமி என தெரிவித்ததை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சோசியல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இனி ஒருபோதும் அணுஉலை கட்டமைப்பில் ஈடுபடாது” என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரானின் அணுத்துறையில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடரும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அணுஆணையத் தலைவர் மொஹம்மட் எஸ்லாமி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்போது, “தயாரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகள் இடைநிறையாமல் தொடர்வதே தற்போதைய திட்டம்,” என எஸ்லாமி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என மறுத்து வருகிறது.

எனினும், அது அமைதிக்கே ஏற்றபடியாக இல்லாத அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி, சர்வதேச ஆய்வாளர்களின் பார்வையைத் தடுக்க முயற்சி செய்ததாகவும், ஏவுகணை திறன்களை விரிவாக்கியிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

யுரேனியத்தை கடத்தி அமெரிக்காவை முட்டாளாக்கிய ஈரான்: ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை! | Iran Working To Restore Its Nuclear Industry

இந்த நிலையில், மொஹம்மட் எஸ்லாமியின் கருத்துகள் வெளியாகும் நேரத்தில், ஈரான் இஸ்ரேலுடன் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading