ரணிலை ஆதரிக்கும் புதிய கூட்டணி: நாளை உதயம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்க உள்ளதாக அறிவித்திருந்த பின்புலத்தில் நாளை புதன்கிழமை இந்தக் கூட்டணி தொடர்பிலான அறிவிப்பு வெளியாக உள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பல தரப்புகள் இந்தக் கட்சியில் அல்லது கூட்டணியில் இணைய உள்ளன.
கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் காலை 10.30 மணிக்கு விசேட நிகழ்வொன்று இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்களம், தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கூட்டணியாக இது உதயமாக உள்ளது.
அதுபோன்று நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் கூட்டணியாக இது இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, நளின் பெர்னாண்டோ, ஜோன் சேனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன, நிமல் லான்சா, சாமர சம்பத் தசநாயக்க, கோட்டகந்த குணதிலக்க, எஸ்.எம்.நாகத் குணதிலக்க, ஜகதத் குணதிலக்க, எம்.முஷாரப், இஷாக் ரஹ்மான், எஸ்.வியாளேந்திரன், நசீர் அஹமட், மொஹமட் முஸம்மில், அலி சப்ரி ரஹீம், உதயண கிரிந்திகொட உட்பட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
