ரத்மலானை பகுதியில் அதிகமான மழை வீழ்ச்சி
நாட்டின் அதிகமான மழை வீழ்ச்சி ரத்மலானை பகுதியில் பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் 1.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 39.4 மி.மீ. மழை வீழ்ச்சியே இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதேவேளைஇ வவுனியா மற்றும் குருணாகலை மாவட்டங்களில் இன்று நண்பகல் வேளையில் வெப்பநிலை 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம்இ ஹம்பாந்தோட்டைஇ அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை 03 செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
