Local

ரூபாவைப் பாதுகாக்க மத்திய வங்கி 372 மில்லியன் டொலர்  விற்பனை!

ரூபாவின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இலங்கை மத்திய வங்கி நவம்பர் மாதத்தில் 372.35 மில்லியன் அமெரிக்க டொலர்களை விற்பனை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இலங்கை ரூபாவை ஸ்திரப்படுத்துவதற்கான தனது முயற்சிகளை முடுக்கி விட்டதாக அண்மைய மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, நவம்பர் மாதத்தில் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 61.71 மில்லியன் அமெரிக்க டொலரை வாங்கியது. இதன்படி, மத்திய வங்கி உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் மொத்தம் 310.64 மில்லியன் டொலரை விற்பனை செய்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை தற்போது 203 ரூபாவாக உள்ளதுடன், வெளிநாட்டுப் பணம் மட்டும் ஒரு டொலருக்கு 210 ரூபாவாக செலுத்தப்படுகிறது.

டொலர் சந்தையில் மத்திய வங்கியின் தலையீடு இருந்த போதிலும் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலர் 240 ரூபாவாகவே விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading