LocalUp Country

ரூ. 1000 ‘அவுட் ! அலரிமாளிகையில் கூட்டுஒப்பந்தம் கைச்சாத்து!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் முன்னிலையில் அதுவும் அலரிமாளிகையில் வைத்தே இன்று நண்பகல் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்ப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இதனடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைய சம்பளம் 700 ரூபாவாகவும் தேயிலையின் விலை அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 50 ரூபாவும் மேலதிக ஒரு கிலோ தேயிலைக்கு 40 ரூபாவும் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று மாத நிலுவை தொகையை வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு அமுலில் இருக்கும்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading