LocalNorth

யாழ். பருத்தித்துறையில் இன்று பெருமளவான கஞ்சா சிக்கியது!

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து ஒரு தொகுதி கேரள கஞ்சாவை பருத்தித்துறைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பருத்தித்துறை, இன்பசிட்டி கடற்கரைப் பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்தே 68 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்படையினர் வழங்கிய தகவலுக்கமைவாக காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் உத்தரவுக்கமைய பருத்தித்துறைப் பொலிஸார் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்தக் கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சாவை தோட்டக் காணியொன்றில் உலர வைத்தவர்கள் யார் என்று அறியப்படாத நிலையில், தோட்டக் காணியின் உரிமையாளரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 5 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
…………..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading